‘மெட்ராஸ்’ படத்திற்கு கௌரவ விருது!

‘மெட்ராஸ்’ படத்திற்கு கௌரவ விருது!

செய்திகள் 7-Oct-2014 11:36 AM IST VRC கருத்துக்கள்

கார்த்தி நடித்து, சமீபத்தில் வெளியான ‘மெட்ராஸ்’ திரைப்படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதோடு, விமர்சன ரீதியாகவும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒட்டு மொத்த ரசிகர்களின் ஆதரவோடு சூப்பர் ஹிட்டாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘மெட்ராஸ்’ படத்திற்கு மற்றுமொரு கௌரவம் கிடைத்துள்ளது. மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ‘எவிடென்ஸ் அமைப்பு’ மெட்ராஸ் படத்திற்கு ‘சமூக மாற்றத்துக்கான படைப்பு’ என்ற விருதை வழங்குகிறது. இந்த அமைப்பு ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த தளத்தில் பணியாற்றும் படைப்பாளிகளுக்கும், எழுத்தாளர்களுக்கும் ஆண்டுதோறும் விருதுகளையும் வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வரிசையில் ‘மெட்ராஸ்’ படத்தின் திரைக்கதை அமைத்து, இயக்கிய பா.இரஞ்சித்துக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதற்கான் விழா இம்மாதம் 25-ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;