வீரம்... எண்ணி 365-வது நாள் ‘தல 55’

வீரம்... எண்ணி 365-வது  நாள் ‘தல 55’

செய்திகள் 7-Oct-2014 11:13 AM IST Chandru கருத்துக்கள்

அஜித்தின் 3வது கெட்அப் ஸ்டில் நேற்று இணையதளத்தில் வெளியானதிலிருந்து ‘தல’ ரசிகர்கள் படத்தைப் பார்க்கத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். 85 சதவிகித படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது க்ளைமேக்ஸிற்காக ஹைதராபாத்தில் முகாமிட்டிருக்கிறது கௌதம் மேனனின் டீம். திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக நடந்து வருவதால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் தீபாவளிக்கு வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்திருக்கிறது. அதேபோல் இந்த டிசம்பருக்கு வெளியாகும் அல்லது 2015 பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று சொல்லப்பட்டு வந்த ‘தல 55’ படத்தை 2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி அன்று வெளியிடுவதற்கான அனைத்து வேலைகளையும் தயாரிப்புத்தரப்பு ஆரம்பித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த வருட ஆரம்பத்தில் பொங்கலை முன்னிட்டு சிவாவின் இயக்கத்தில் அஜித் நடித்த ‘வீரம்’ படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியானது. படத்திற்கும் பலத்த வரவேற்பு கிடைத்தது. தற்போது இதே சென்டிமென்டை வைத்து, கௌதம் மேனன் படத்தையும் பொங்கல் திருவிழாவிற்கு முந்தைய வெள்ளிக்கிழமையான ஜனவரி 9ஆம் தேதியில் ரிலீஸ் செய்யலாம் என்ற எண்ணம் தயாரிப்பாளருக்கு ஏற்பட்டிருக்கிறதாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அச்சம் என்பது மடமையடா - டிரைலர்


;