‘புரட்சி திலகம்’ சரத்குமார்!

‘புரட்சி திலகம்’ சரத்குமார்!

செய்திகள் 7-Oct-2014 10:41 AM IST VRC கருத்துக்கள்

சரத்குமார் நடித்துள்ள ‘நீ நான் நிழல்’ திரைப்படம் 10-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. இதையொட்டி நேற்று சென்னையில் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடந்தது. அப்போது சரத்குமாரிடம், ‘உங்களுக்கு புரட்சி திலகம்’ என்ற பட்டம் யார் கொடுத்தது?’ என்று கேட்டதற்கு அவர் பதிலளிக்கும்போது,

‘‘உங்களைப் போல் ஒரு பத்திரிகை நண்பர் தான் இந்த பட்டத்தை எனக்கு சூட்டினார். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு இருக்கும் பட்டத்தின் ஒரு பாதியும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு இருக்கும் பட்டத்தின் ஒரு பகுதியும் இணைந்து இந்தப் பட்டம் இருப்பதால், ‘சுப்ரீம் ஸ்டார்’ என்ற பட்டத்தை விட இந்தப் பட்டம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்’’ என்றார் சிரித்துக்கொண்டே!

‘நீ நான் நிழல்’ படத்தின் கதை பெரும்பாலும் மலேசியாவில் நடப்பது மாதிரி! ‘‘இப்படம் சமூகத்துக்கு நல்ல ஒரு கருத்தைக் கூறும் படமாக இருக்கும்’’ என்கிறார் இப்படத்தை இயக்கியிருக்கும் ஜான் ராபின்சன். இந்தப் படத்தில் அர்ஜுன் லால், இஷிதா ஜோடியாக நடித்திருக்க, அன்வர் அலி என்ற மலேசிய போலீஸ் அதிகாரியாக சரத்குமார் சரத்குமார் நடித்துள்ளார். மனோஜ் கே.ஜெயனும் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்துள்ள இப்படம் ‘ஆஷா பரேக்’ என்ற பெயரில் மலையாளத்திலும் ஒரே நேரத்தில் ரிலீசாகிறது. தமிழகம் முழுக்க இப்படத்தை ‘ஸ்ரீமுத்தாரமன் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் டாக்டர் பி.ஜி.எம்.சிவகுமார் வெளியிடுகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எச்சரிக்கை - டிரைலர்


;