தனுஷை பின்தொடரும் 10 லட்சம் ரசிகர்கள்!

தனுஷை பின்தொடரும் 10 லட்சம் ரசிகர்கள்!

செய்திகள் 7-Oct-2014 10:17 AM IST Chandru கருத்துக்கள்

இன்றைய நவீன உலகத்தில் மனிதனின் ஆறாவது விரலாகவே மாறிவிட்டது செல்போன். குறிப்பாக, செல்போன் வைத்திருக்கும் அனைவருமே ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் தங்களுக்கான கணக்கைத் தொடங்கி அதில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்தும், பிறரின் கருத்துக்களுக்கு ‘லைக்’ கொடுத்தும், ‘கமென்ட்’ செய்தும், ‘ஃபேவரைட்’, ‘ரீட்வீட்’ செய்தும் வருவதை தலையாய கடமையாக வைத்திருக்கிறார்கள். தங்களின் அபிமான நடிகர்களின் அன்றாட நடவடிக்கைகளைத் தெரிந்துகொள்வதற்காக ஃபேஸ்புக்கில் அவர்களுடைய அதிகாரபூர்வ பக்கத்தை லைக் செய்தும், ட்விட்டரில் அவர்களை பின்தொடர்ந்தும் வருகிறார்கள் ரசிகர்கள்.

நடிகர் தனுஷ் தனக்கான அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தையும், டவிட்டர் கணக்கையும் துவங்கி அதில் தொடர்ந்து தன்னைப் பற்றியும், தன் படங்களைப் பற்றியும் செய்திகள் வெளியிட்டு வருகிறார். இந்த 2014ஆம் ஆண்டுதான் அவருடைய ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் அதிகாரபூர்வமாக்கப்பட்டன. குறைந்த காலத்திலேயே அதிகளவிலான ரசிகர்கள் தனுஷை ட்விட்டரில் பின்தொடரத் தொடங்கியுள்ளார்கள். குறிப்பாக ‘வேலையில்லா பட்டதாரி’யின் சூப்பர்ஹிட் வெற்றிக்குப் பிறகு அவருக்கான ரசிகர் வட்டம் பெரிய அளவில் பரந்து விரிந்தது. தவிர, ஹிந்தியிலும் ‘கொலவெறி’ பாடலின் புகழ், ‘ரான்ஜ்னா’வின் வெற்றி, அமிதாப்புடன் இணைந்து நடிக்கும் ‘ஷமிதாப்’ என தனுஷிற்கு வட இந்திய ரசிகர்களும் பெரிய அளவில் இருக்கிறார்கள். இதனால் நடிகர் தனுஷை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது 10 லட்சத்தை எட்டியுள்ளது. இதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ‘ட்வீட்’டும் செய்துள்ளார் தனுஷ்.

நடிகர் தனுஷின் ஃபேஸ்புக் பக்கத்தை 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ‘லைக்’ செய்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்


;