ஷார்ப்பாகும் ‘கத்தி’ டிரைலர்... ரிலீஸ் எப்போது?

ஷார்ப்பாகும் ‘கத்தி’ டிரைலர்... ரிலீஸ் எப்போது?

செய்திகள் 7-Oct-2014 10:02 AM IST Chandru கருத்துக்கள்

நாளுக்கு நாள் ‘கத்தி’ பற்றிய எதிர்பார்ப்பில் நகம் கடித்துக் கொண்டிருக்கிறார்கள் ‘இளையதளபதி’ ரசிகர்கள். தற்போது டப்பிங் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. கடந்த சில நாட்களாக ‘கத்தி’யின் முழுநீள டிரைலரை உருவாக்கும் பணியும் இன்னொருபுறம் வேகவேகமாக நடந்து கொண்டிருக்கிறது. ‘கத்தி’யின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரில் ரசிகர்களால் பெரிதாக எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் இந்த டிரைலரில் இப்படத்தின் கதைக்களம் என்ன? விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறாரா? இல்லையா? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம். ‘டிரைலர் கட் ஸ்கிரீன் சாட்’ எடுக்கப்பட்டு விஜய் ஜெயலில் சமைப்பது போன்ற ஸ்டில் ஒன்று இரண்டு நாட்களாக இணையதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அனேகமாக இந்தக் காட்சியும் அந்த டிரைலரில் இடம் பெறலாம் என்கிறார்கள். அதோடு பாடல் காட்சிகளும், சதீஷ் சம்பந்தப்பட்ட காமெடிக் காட்சிகள், வில்லனின் என்ட்ரி போன்றவையும் இந்த டிரைலரில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த டிரைலர் இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வார ஆரம்பத்தில் வெளியிடப்படலாம் என நம்பத் தகுந்தவர்களிடமிருந்து தகவல் கிடைத்திருக்கிறது.

‘ஐ’ டீஸர் 70 லட்சம் பார்வைகளையும் தாண்டி இன்னமும் ‘யு டியூப்’பில் பார்க்கப்பட்டுக் கொண்டிருக்க, ‘கத்தி’ ஃபர்ஸ்ட்லுக் டீஸர் இப்போதுதான் 20 லட்சத்தையே தொடுகிறது. இந்தமுறை ‘கத்தி’ டிரைலரை பெரிய அளவில் புரமோட் செய்து, பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் திட்டமும் தயாரிப்பாளர்கள் வசம் இருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;