தன் வாய்ப்பை பாடகருக்கு விட்டுக் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்!

தன் வாய்ப்பை பாடகருக்கு விட்டுக் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்!

செய்திகள் 6-Oct-2014 3:48 PM IST Chandru கருத்துக்கள்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் சமீபத்தில் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆகியுள்ள ‘காவியத்தலைவன்’, ‘ஐ’ படங்களின் ஆல்பத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடாதது ரசிகர்களுக்கு ஒரு பெரிய குறையாகவே இருந்துள்ளது. ஆனால், ரஹ்மான் ஏன் பாடவில்லை என்பது குறித்து இயக்குனர் வசந்தபாலன் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் உள்ள விஷயங்கள் அப்படியே இங்கே உங்களுக்காக....

இசையமைப்பாளர் ரகுமானிடம் பல விசயங்களை பேசிக்கொண்டிருந்தேன். ‘காவியத்தலைவன்’, ‘ஐ’ இரண்டு படங்களிலிலும் ரகுமான் அவர்கள் பாடாததைக் குறிப்பிட்டு நீங்கள் ஏன் இந்த இரண்டு படங்களிலிலும் பாடவில்லை என்று கேட்டேன்.

‘கண்டிப்பா பாடனுமுனு கட்டாயமா என்ன?’

‘ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்களே’ என்று சொன்னேன்.

‘என் இசையை ஒழுங்கா பண்ணா போதும்’ என்று காட்டமாக பதில் சொன்னார்.
நான் விடவில்லை, காவியத்தலைவனில் பாட இடம் இல்லை. ‘ஐ’ திரைப்படத்தில் பாடியிருக்கலாமே என்று கேட்டேன்.

சிறிது மௌனம்.

‘பாடியிருக்கலாம்... என்னோடு நீ இருந்தால்.... பாடலை பாடியிருக்கலாம். ஆனால் பாடகர் சித் ஸ்ரீராம் என்னை விட நன்றாக பாடியுள்ளார். அவருக்கு கடல் திரைப்படத்தில் பாடியபோது அந்த அளவு கவனிப்பு கிடைக்கவில்லை. இந்த பாடல் ‘ஹிட்’ ஆனால் அவருக்கு ஒரு வாழ்க்கை கிடைக்கும் அதனால் தான் நான் பாடவில்லை. அவருக்கு கிடைக்கவேண்டியதை நான் பிடிங்கிக்கொள்ளகூடாதுல்ல பாலன்‘‘ என்றார்.

ஒரு நல் இதயம் எப்படி இயங்குகிறது பாருங்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டிரைலர்


;