சமந்தாவுக்கு ‘வாய்ஸ்’ கொடுத்த ரவீனா!

சமந்தாவுக்கு ‘வாய்ஸ்’ கொடுத்த ரவீனா!

செய்திகள் 6-Oct-2014 3:20 PM IST Chandru கருத்துக்கள்

‘கத்தி’ படம் தீபாவளிக்கு வெளியீடு என்பது உறுதி செய்யப்பட்டு வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு தற்போது டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பிஸியாகப் போய்க்கொண்டிருக்கின்றன. விஜய் தனக்கான டப்பிங் வேலைகளை கிட்டத்தட்ட முடித்துக் கொடுத்துவிட்டாராம். அதேபோல் இப்படத்தில் சமந்தாவுக்கு வாய்ஸ் கொடுத்து வருபவர் ரவீனா ரவி. இவர் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஸ்ரீஜா ரவியின் மகளாம். ‘555’ படத்தில் மிருத்திகா, எரிக்கா பெர்னான்டஸ், ‘நிமிர்ந்து நில்’ படத்தில் அமலா பால் ஆகியோருக்கு ரவீனா பின்னணி குரல் கொடுத்திருக்கிறாராம். முதல்முறையாக விஜய் படத்திலும், ஏ.ஆர்.முருகதாஸ் படத்திலும் வாய்ப்புக் கிடைத்திருப்பதால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறாராம் இவர். ‘கத்தி’ படத்தில் சமந்தாவுக்கான வாய்ஸ் கொடுக்கும் வேலைகள் இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்துவிடுமாம். இன்னொருபுறம் ‘கத்தி’யின் முழுநீள டிரைலர் ஒன்றும் தயாராகிக் கொண்டிருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;