குளுகுளு ஊட்டியில் ‘ஆம்பள’ டீம்!

குளுகுளு ஊட்டியில் ‘ஆம்பள’ டீம்!

செய்திகள் 6-Oct-2014 2:49 PM IST Chandru கருத்துக்கள்

ஹரி இயக்கும் ‘பூஜை’யின் படப்பிடிப்பு, டப்பிங் வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு, தற்போது ‘ஆம்பள’ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் விஷால். செப்டம்பர் 19ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘அரண்மனை’ படத்தைத் தொடர்ந்து இப்படத்தை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. இப்படத்தில் விஷாலுக்கு அத்தைகளாக ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண் ஆகியோர் நடிக்க அவர்களின் மகள்களாக ஹன்சிகா, மாதவி லதா, மதூரிமா ஆகியோர் நடித்து வருகிறார்கள். தற்போது இந்த ‘ஆம்பள’ டீம் படப்பிடிப்பிற்காக ஊட்டியில் முகாமிட்டுள்ளது. தன் கணவர் சுந்தர்.சியுடன் குஷ்புவும் ஊட்டிக்கு சென்றிருக்கிறார். இதனால் இப்படத்தில் அவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்பட்டுள்ளது. இப்படத்தை வரும் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறார் சுந்தர்.சி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;