பிரதமர் மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் சூர்யா!

பிரதமர் மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் சூர்யா!

செய்திகள் 6-Oct-2014 2:03 PM IST Chandru கருத்துக்கள்

சமீபத்தில் நடிகர் மம்முட்டியின் அழைப்பை ஏற்று ‘மை ட்ரீ சேலஞ்ச்’ எனும் மரம் நடும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சூர்யா, தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் இணைந்து பணியாற்றுவோம் என்று அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்....-

‘‘வணக்கம். தெய்வீகத்தன்மைக்கு அடுத்தபடியானது தூய்மை... என்றார் தேசப்பிதா மகாத்மா காந்தி. தூய்மை, ஆரோக்கியத்திற்கு முன்னோடி. சுத்தம், சுகாதாரம், தூய்மை ஆகியவையே இன்றைய தேவை.

நம்மையும், நமது இல்லத்தையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்வது முக்கியமானதாகும். இது ஒவ்வொரு வரும் ஆரோக்கியமாக இருக்க உதவும். நமது குழந்தைகளுக்கு செல்வத்தை அளிப்பது எவ்வளவு முக்கியமோ தூய்மையான சுற்றுச்சூழலை அவர்களுக்கு அளிப்பது அதைவிட முக்கியமானது. ஆரோக்கியமான இந்தியாவுக்கு சுத்தமான இந்தியாவை உருவாக்குவோம். பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை பாரத இயக்கத்தில் இணைந்து அதற்கு ஆதரவு தாருங்கள். ‘ஜெய் பாரதம், தூய்மை பாரதம்’!’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;