சினிமாவுக்கு வரும் சின்னத்திரை இயக்குனர்!

சினிமாவுக்கு வரும் சின்னத்திரை இயக்குனர்!

செய்திகள் 6-Oct-2014 2:00 PM IST VRC கருத்துக்கள்

சின்னத்திரையில் ‘சின்ன பாப்பா’ உட்பட பல தொடர்களை இயக்கிய சக்திவேல் இயக்கும் திரைப்படம் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’. இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் சில சம்பவங்களை தொகுத்து நகைச்சுவை படமாக உருவாகும் இப்படத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளர் தீபக் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுகம் நேஹா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், சுப்பு பஞ்சு, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், சென்ட்ராயன் முதலானோரும் நடிக்கிறார்கள். ‘ஏ 7’ என்ற இசைக் குழுவை சேர்ந்தவர்கள் இப்படத்தின் மூலம் இசை அமைப்பாளர்களாக அறிமுகமாக, ஆர்.வெங்கடேசன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை ‘விவி சினி மாஸ்க்’ என்ற நிறுவனம் சார்பில் வெங்கட் ராஜ் தயாரிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சதுரங்க வேட்டை 2 - டீஸர்


;