3 இரவில் படமாக்கப்பட்ட ‘ரோமியோ ஜூலியட்’ க்ளைமேக்ஸ்!

3 இரவில் படமாக்கப்பட்ட ‘ரோமியோ ஜூலியட்’ க்ளைமேக்ஸ்!

செய்திகள் 6-Oct-2014 11:32 AM IST Chandru கருத்துக்கள்

ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகி நீண்டநாட்களாக ரிலீஸுக்குக் காத்துக் கொண்டிருக்கிறது ‘பூலோகம்’ படம். இது தவிர தற்போது 3 படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஜெயம் ரவி. தன் அண்ணன் ராஜாவின் இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து ‘தனி ஒருவன்’ படத்தில் நடிக்கும் அவர், சுராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்காக தற்போது தென்காசியில் முகாமிட்டிருக்கிறார். இந்த இரண்டு படங்களோடு நந்தகோபால் தயாரிப்பில், லக்ஷ்மன் இயக்கும் ‘ரோமியோ ஜூலியட்’ படத்திலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்திற்காக சமீபத்தில் 3 நாள் இரவு நேரத்தில் க்ளைமேக்ஸ் காட்சி படமாக்கப்பட்டதாம். ஹன்சிகா நாயகியாக நடிக்கும் இந்த ரொமான்ஸ் காமெடித் திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க, படத்தை டிசம்பரில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - செந்தூரா வீடியோ


;