மம்முட்டி, மோகன்லால் இணையும் படம்!

மம்முட்டி, மோகன்லால் இணையும் படம்!

செய்திகள் 6-Oct-2014 11:25 AM IST VRC கருத்துக்கள்

மோகன்லால், மம்முட்டியை வைத்து தனித் தனியாகவும், இருவரையும் ஒன்றாக நடிக்க வைத்தும் மலையாளத்தில் பல ஹிட் படங்களை தந்தவர் இயக்குனர் ஷாஜி கைலாஸ்! இவர் மீண்டும் மோகன்லால், மம்முட்டி இணைந்து நடிக்கும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். அடுத்த வருடம் துவங்கவிருக்கும் இப்படத்தின் ஸ்கிரிப்ட்டை மலையாளத்தின் பிரபல திரைக்கதை ஆசிரியர்களான ரஞ்சித் - ரஞ்சி பணிக்கர் இருவரும் இணைந்து எழுதுகின்றனர். இப்படம் பிரம்மாண்டமான முறையில் தயாராகவிருக்கிறதாம். இப்படத்தை, ‘திருசியம்’ உட்பட பல வெற்றிப் படங்களை தயாரித்த ‘ஆசீர்வாத் சினிமாஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. தமிழில் ‘ஜனா’, ‘வாஞ்சி நாதன்’, ‘எல்லாம் அவன் செயல்’ ஆகிய படங்களை இயக்கியதோடு, தற்போது ஆர்.கே.நடிப்பில் ‘என் வழி தனி வழி’ என்ற படத்தை இயக்கி வருபவர் ஷாஜி கைலாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புலிமுருகன் - டிரைலர்


;