‘அனேகனு’க்கு அர்த்தம் சொன்ன கே.வி.ஆனந்த்!

‘அனேகனு’க்கு அர்த்தம் சொன்ன கே.வி.ஆனந்த்!

செய்திகள் 6-Oct-2014 11:04 AM IST Chandru கருத்துக்கள்

4 வித்தியாசமான கெட்அப்களில் தனுஷ் நடித்து வரும் படம் ‘அனேகன்’. கே.வி.ஆனந்த் இயக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மும்பை வரவு அமைரா தஸ்தர் நடிக்கிறார். முக்கிய வேடமொன்றில் கார்த்திக் நடிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை ஓம்பிராகஷ் கவனிக்க, இசையமைக்கிறார் கே.வி.ஆன்ந்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ்.

திருவாசகத்தில் மாணிக்கவாசகர் ‘ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க’ என்று எழுதியிருக்கிறார். அதாவது ‘இறைவன் பலவாக இருக்கிறான்... ஒருவன் அல்ல’ என்பதுதான் அவர் பயன்படுத்திய ‘அனேகன்’ என்ற வார்த்தைக்கு அர்த்தமாம். இந்த அர்த்தத்தை பிரதிபலிக்கும் வகையிலேயே தன் படத்திற்கு ‘அனேகன்’ என்ற தலைப்பை வைத்திருக்கிறாராம் கே.வி.ஆனந்த்.

‘‘அனேகன் ஒரு காதல் படம்தான். காதல் ஒருத்தனை நிச்சயமா மாத்தும். அப்படி ஒருக்காலும் மாத்த முடியாதவன்னு யாராவது இருக்க முடியுமா? எனக்கு அப்படித் தோணலை. ஒரு அருமையான லவ் இதுல இருக்கு. என்னோட படத்துல லாஜிக்கை எந்த விதத்திலும் மீறமாட்டேன். எவ்வளவு கமர்ஷியலா இருந்தாலும் ஏதாவது காரணத்தோடதான் காட்சிகள் நகரும். அப்படிதான் இந்த படமும் ஒரு காதல் கலந்த ஆக்ஷன் படமா வந்திருக்கு’’ என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்


;