தேசிய விருது குறித்து சத்யராஜ்!

தேசிய விருது குறித்து சத்யராஜ்!

செய்திகள் 6-Oct-2014 10:55 AM IST VRC கருத்துக்கள்

‘‘கிட்டத்தட்ட 36 வருடங்களில் 250 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன்! சமீபகாலமாக எனக்கு சினிமாவில் நல்ல கேரக்டர்கள் கிடைத்து வருகிறது. அதில் விஷால் - ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள ‘பூஜை’ பட போலீஸ் கேரக்டரும் ஒன்று! விஷாலை பற்றி நான் ஒரு விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். எனக்கு அவர், ‘பூஜை’ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்காக இதை நான் கூறவில்லை. பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்தில் விஷால் ரொம்பவும் கஷ்டப்பட்டு, நன்றாக நடித்திருந்தார். ஒரு நடிகனுக்கு தான் தெரியும் அவர் அந்த கேரக்டரில் நடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்பது! ‘அவன் இவன்’ படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும்! ஆனால் கிடைக்கவில்லை! ஏன் அவருக்கு விருது கொடுக்கவில்லை எனப்தை பற்றியெல்லாம் நாம் பேச முடியாது. தேசிய விருது கிடைத்தால் கமல் சாருக்கு கிடைத்தது மாதிரி நமக்கும் விருது கொடுத்திருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்! விருது கிடைக்கவில்லையா, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கே தேசிய விருது கொடுக்கவில்லை… அப்படின்னு நம்ம எடுத்துக்க வேண்டியது தான்’’ என்றார் சத்யராஜ்! அவர் இப்படி பேசியது நேற்று சென்னையில் நடந்த ‘பூஜை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;