சத்தமில்லாமல் இறுதிக் கட்டத்தை எட்டிய ‘தல 55’

சத்தமில்லாமல் இறுதிக் கட்டத்தை எட்டிய ‘தல 55’

செய்திகள் 6-Oct-2014 10:47 AM IST Chandru கருத்துக்கள்

வழக்கமாக கௌதம் மேனன் படங்கள் மெதுவாகத்தான் வளரும். ஒவ்வொரு காட்சியையும் பொறுமையாக யோசித்து யோசித்தே காட்சிப்படுத்துவார். ஆனால், தற்போது அஜித்தை இயக்கிக் கொண்டிருக்கும் படம் முன்கூட்டியே எல்லா விஷயங்களையும் திட்டமிட்டு வைக்கப்பட்டுள்ளதால் வேக வேகமாக வளர்ந்து வருகிறதாம். வட இந்தியாவின் ராணுவத் தளவாடப் பகுதிகளில் முக்கிய காட்சிகள் சிலவற்றை படமாக்கிவிட்டு தற்போது க்ளைமேக்ஸ் காட்சிகளை ஹைதராபாத்தில் வைத்து படமாக்கி வருகிறார்களாம். அதோடு இப்படத்தின் ஒளிப்பதிவாளர் டான் மெக்கார்தர் ‘‘படப்பிடிப்பின் இறுதிக் கட்டத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறோம்!’’ என ட்வீட் செய்திருக்கிறார்.

நாம் விசாரித்தவரை படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டது என்ற தகவல் கிடைத்தது. இன்னும் 15 சதவிகித படப்பிடிப்பு மட்டுமே மீதமிருக்கிறதாம். இரண்டு பாடல்கள், சில பேட்ஜ் காட்சிகள் மட்டுமே படமாக்கப்படவிருக்கிறதாம். எனவே கௌதம் ஏற்கெனவே அறிவித்தபடி இந்த மாத இறுதிக்குள் ‘தல55’ படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் அனைத்தும் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். போஸ்ட்புரொடக்ஷன் வேலைகளும் திட்டமிட்டபடி முடிவடைந்தால் நவம்பரில் இசை, டிசம்பரில் படம் என்ற அறிவிப்பும் சாத்தியமாக வாய்ப்பிருக்கிறது.

இந்த வருட கிறிஸ்துமஸ் அல்லது அடுத்த வருட பொங்கலுக்கு ‘தல’ ஆட்டம் நிச்சயம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;