‘லிங்கா’ வாய்ப்பை மிஸ் செய்த தம்பி ராமையா!

‘லிங்கா’ வாய்ப்பை மிஸ் செய்த தம்பி ராமையா!

செய்திகள் 6-Oct-2014 9:52 AM IST Chandru கருத்துக்கள்

வெறும் காமெடியனாக மட்டுமல்லாமல், குணச்சித்திர வேடம், வில்லன் என தனித்துவம் வாய்ந்த கேரக்டர்களிலும் நடித்து வெகுஜன ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வரும் நடிகர் தம்பி ராமையா இன்றைய கோலிவுட்டின் மோஸ்ட் வான்டட் காமெடியன். வருடத்திற்கு குறைந்தது 15 படங்களாவது இவர் நடிப்பில் வெளிவந்துவிடும். அப்படிப்பட்ட தம்பி ராமையா கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘லிங்கா’ பட வாய்ப்பை ‘மிஸ்’ செய்துவிட்டாராம். தற்போது சித்தார்த்துடன் ‘காவியத்தலைவன்’, சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ஆகியவற்றோடு ஆர்யா, ஜெயம் ரவி, கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா என முன்னணி நட்சத்திரங்கள் பலருடனும் இணைந்து நடித்து வரும் தம்பி ராமையாவால் ‘லிங்கா’ படத்திற்காக தொடர்ந்து 32 நாட்கள் கால்ஷீட் கொடுக்க முடியாததால் இந்த வாய்ப்பு பறிபோனதாம். இதுகுறித்த ரொம்பவே வருத்தத்தில் இருக்கிறாராம் தம்பி ராமையா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;