இசையமைப்பாளர் தேவா தலைமையில் கூட்டு பிரார்த்தனை!

இசையமைப்பாளர் தேவா தலைமையில் கூட்டு பிரார்த்தனை!

செய்திகள் 6-Oct-2014 9:49 AM IST Chandru கருத்துக்கள்

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா எல்லா வழக்குகளில் இருந்தும் மீண்டு வரவேண்டும் என்பதற்காக தமிழ்நாடு மாநில கிராமிய கலைஞர்கள் மற்றும் கலைத் தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வித்தியாசமான முறையில் கூட்டு பிரார்த்தனை ஒன்றை நடத்த உள்ளதாம். இது குறித்து அதன் மாநில தலைவர் கலைமாமணி பி.சோமசுந்தரம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...

‘‘புரட்சி தலைவி அம்மா அவர்கள் எல்லா வழக்குகளில் இருந்தும் மீண்டு வர வேண்டும் என்பதற்காக எங்கள் அமைப்பை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்ய உள்ளோம். சிவன், பார்வதி, முருகன், விநாயகர், காளி உட்பட பல வேடங்களில் கூட்டு பிரார்தனை நடைபெற உள்ளது. அத்துடன் கிராமிய கலைஞர்கலான கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் சம்மந்தப் பட்ட கலைஞர்கள் அந்த உடையலங்காரத்துடன் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர். இந்தப் பிரார்த்தனையில் தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றத் தலைவர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா தலைமையில் செயலாளர் சித்ரா விஸ்வேஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த கூட்டு பிரார்த்தனை 07.10.2014 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற உள்ளது. இதில் கலைமாமணி விருது பெற்ற பல கலைஞர்கள் பங்கு பெறுகிறார்கள்’’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குலேபகாவலி - புதிய டிரைலர்


;