‘‘அருவாளை விட ஸ்ருதிஹாசனை தூக்கினேன்!’’ - விஷால்

‘‘அருவாளை விட ஸ்ருதிஹாசனை தூக்கினேன்!’’   - விஷால்

செய்திகள் 6-Oct-2014 9:44 AM IST VRC கருத்துக்கள்

ஹரி இயக்கத்தில் விஷால் தயாரித்து, நடித்திருக்கும் ‘பூஜை’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நேற்று (5-10-14) சென்னையில் நடந்தது. அப்போது நடிகர் விஷால் பேசும்போது,

‘‘ஹரி சார் தன் படங்களில் ஏதாவது ஒரு மாவட்டத்தை முன்னிலைப்படுத்துவார். இப்படத்தின் கதை கோயம்பத்தூரில் துவங்கி பீஹார், பாட்னாவில் முடிகிற மாதிரி அமைத்திருக்கிறார். ஹரி சார் இயக்கியுள்ள படம் இது என்பதால், படத்தில் அருவாளை தூக்கியிருப்பீர்களே என்று கேட்டீர்கள்! உண்மையை சொல்லப் போனால அருவாள் தூக்கியிருப்பதை விட, படத்தில் ஸ்ருதி ஹாசனை அதிகமாக தூக்கியிருப்பேன்’’ என்றார் சிரித்தவாறு! மேலும் விஷால் பேசும்போது,

“கோயம்புத்தூரில் அரிவாளையும், பாட்னாவில் துப்பாக்கியையும் இடத்துக்கு ஏற்றமாதிரி தூக்கி எதிரிகளை அழிக்கும் இப்படத்தில் சத்யராஜ் சார் கூட சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவருக்குக் கிடைக்கும் கைத் தட்டலில் எனக்கும் கொஞ்சம் கிடைக்கும் என்று நம்புகிறேன். நடிகன் எட்டு மணிநேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும் என்பார்கள். ஆனால் அதையெல்லாம் தாண்டி, டைரக்டர் ‘பேக் அப்’ சொல்லும்வரை இப்படத்தில் நடித்துக் கோண்டே இருந்தோம். ஒவ்வொரு நாளும் நடித்த காட்சிகளில் கிடைத்த திருப்தியோடு தூங்கப் போனேன். ஹரி சாரை ‘இயக்குனர்களில் ஒரு எம்.ஜி.ஆர்.’ என்று சொல்ல்லாம். எம்.ஜி.ஆர்.எப்படி தன்னுடன் இருக்கும் ஒவ்வொருவரையும் நன்றாக கவனித்துக் கொள்வாரோ, அதைப்போல ஹரி சாரும் தன்னுடன் இருப்பவர்களை நன்றாக கவனித்துக் கொள்வார். ‘தாமிரபரணி’ படத்திற்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து இப்படத்தில் அவருடன் இணைந்துள்ளேன். ‘பூஜை’ படத்தை படத்தை பொருத்தவரையில் ஒரு தயாரிப்பாளரா எனக்கு சந்தோஷம் தான். இப்படம் தமிழில் ‘பூஜை’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘பூஜா’ என்ற பெயரிலும் வருகிற 22-ஆம் தேதி தீபாவளியன்று ரிலீசாகவிருக்கிறது. குடும்பத்துடன் வந்து பார்க்கக் கூடிய படமாக ‘பூஜை’ இருக்கும்’’ என்றார் விஷால்.

இந்த நிகழ்ச்சியில் விஷால், இயக்குனர் ஹரியுடன் கதாநாயகி ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், ஒளிப்பதிவாளர் ப்ரியன் ஆகியோரும் கலந்துகொண்டு பேசினர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;