‘அவம்’ படத்திற்கு குரல் கொடுத்த கமல்ஹாசன்!

‘அவம்’ படத்திற்கு குரல் கொடுத்த கமல்ஹாசன்!

செய்திகள் 4-Oct-2014 3:06 PM IST VRC கருத்துக்கள்

‘வி.ஜே.புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குனர் விஜய் வில்வாகிரிஷ் இயக்கத்தில், சுந்தர்மூர்த்தி இசையில் உருவாகிவரும் படம் “அவம்”. இப்படத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் கமல்ஹாசன் ஒரு பாடல் பாடியுள்ளார். இந்த பாடல் ஒரு இளைஞனின் தனிமையையும், கவலையையும் உணர்ச்சிபூர்வமாக வெளிபடுத்தும் பாடலாம். இதனால் இப்பாடலின் வரிகளை உணர்ந்து அதன் உண்மையை வெளிப்படுத்தும் வகையில் தன் குரலின் வாயிலாக அப்பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளாராம் கமல்ஹாசன். மதன் கார்க்கியின் கருத்துமிக்க வரிகள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்கிறார் இப்படத்தின் இயக்குனர் வில்வாகிரிஷ்.

இப்படத்தில், கௌரவ் நாயகனாக நடிக்க, கர்நாடகாவை சேர்ந்த காவ்யா ஷேட்டி நாயகியாக நடிக்கிறார். விவேக் லெஸ்தர் உத்துப் வில்லனாக நடிக்க, கார்த்திக் வில்வாகிரிஷ், காஜல் வசிஷ்ட், எம்.எஸ்.பாஸ்கர், அனுபமா குமார் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;