அடுத்தடுத்து வெளியாகும் விக்ரமின் 2 படங்கள்!

அடுத்தடுத்து வெளியாகும் விக்ரமின் 2 படங்கள்!

செய்திகள் 4-Oct-2014 12:53 PM IST VRC கருத்துக்கள்

‘ஐ’ படத்திற்காக கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கடுமையாக உழைத்த விக்ரம் அதன் ரிலீசுக்காக பெரிதும் ஆவலுடன் காத்திருக்கிறார். ‘ஐ’ படத்தில் நடித்து முடித்த கையோடு விஜய் மில்டன் இயக்கி வரும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். சமீபத்திய தகவலின் படி இப்படத்தின் 85 சதவிகித படப்பிடிப்பும் முடிந்து விட்டதாம். இப்படம், ஆக்‌ஷன் என்டர்டெயின்மென்ட் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் மூலம் விக்ரமுடன் முதன் முதலாக கை கோர்த்துள்ளார் சமந்தா. இவர்களுடன் முக்கிய கேரக்டர் ஒன்றில் பசுபதி நடிக்கிறார். அடுத்த ஆண்டு (2015) துவக்கத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ‘ஐ’ படத்தின் ரிலீசை தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படமும் ரிலீசாகவிருப்பதால் விக்ரம் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;