‘அஞ்சான்’ பாணியில் கத்தியா’?

‘அஞ்சான்’ பாணியில் கத்தியா’?

செய்திகள் 4-Oct-2014 12:14 PM IST VRC கருத்துக்கள்

திடீரென வதந்தி ஒன்று திரையுலகில் உலவிக் கொண்டிருக்கிறது. அதாவது ஏ.ஆர்.முருகதாஸின் ‘கத்தி’ படத்தில் கதிரேசன், ஜீவானந்தம் என்ற இரண்டு கேரக்டர்களில் விஜய் நடிக்கிறார் என பேட்டிகளில் இயக்குனரே தெரிவித்திருக்கிறார். ஆனால், இப்படத்தில் விஜய் இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறாரா? அல்லது ‘அஞ்சான்’ படத்தில் ராஜு பாய், கிருஷ்ணா என்ற இரண்டு பெயர்களில் சூர்யா நடித்ததைப்போல் நடிக்கிறாரா? என்பதே அந்த வதந்தி!

நாம் விசாரித்தவரையில் ‘கத்தி’யில் விஜய் இரண்டு கெட்அப்களில் நடிக்கிறார் என்பதை மட்டும் உறுதியாகக் கூறினார்கள். ஆனால், அது இரண்டு கதாபாத்திரமா? அல்லது ஒரு விஜய்யே இரண்டு கெட்அப்களில் தோன்றுகிறாரா? என்பதை மட்டும் கூற மறுத்துவிட்டார்கள். ‘அஞ்சான்’ படம் வெளிவருவதற்கு முன்பு வரை சூர்யா இரட்டை வேடங்களில் நடிப்பதாகவே இயக்குனர் லிங்குசாமியிலிருந்து அனைவரும் கூறி வந்தார்கள். ஆனால், படம் ரிலீஸான பிறகுதான் ஒரே சூர்யா, இரண்டு பெயர்களில் நடித்த சஸ்பென்ஸ் தெரிய வந்தது.

‘கத்தி’ படத்தில் விஜய்யின் ஒரு கெட்அப் மட்டுமே இதுவரை வெளியிடப்பட்டு வருகிறது. தவிர, ஃபர்ஸ்ட் லுக் டீஸரிலும் இரண்டு விஜய்யும் ஒரே ஃபிரேமில் தோன்றுவது போன்ற காட்சி எதுவும் இடம் பெறவில்லை. ஆகவே, ‘அஞ்சான்’ படத்தைப் போன்று ‘கத்தி’யிலும் இருக்கும் என யூகத்தின் அடிப்படையில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கான விடை ‘கத்தி’யின் முழுநீள டிரைலரில் கிடைக்குமா? அல்லது தீபாவளி வரை காத்திருக்கத்தான் வேண்டுமா என்பது சஸ்பென்ஸாகவே இருக்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;