ஒரே நாளில் மூன்று படங்களுக்கு பூஜை போட்ட சி.வி.குமார்!

ஒரே நாளில் மூன்று படங்களுக்கு பூஜை போட்ட சி.வி.குமார்!

செய்திகள் 3-Oct-2014 5:41 PM IST Chandru கருத்துக்கள்

புதிய இயக்குனர்களை அறிமுகம் செய்து நல்ல தரமான படங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும் சி.வி.குமாரின் ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் இன்று மட்டும் 3 புதிய படங்களுக்கு பூஜை போட்டுள்ளது. ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘தெகிடி’, ‘வில்லா’, ‘முண்டாசுப்பட்டி’, ‘சரபம்’ ஆகிய படங்களைத் தயாரித்திருக்கும் இந்நிறுவனத்தின் அடுத்த படைப்பாக விரைவில் வெளிவரவிருக்கிறது சித்தார்த்தின் ‘எனக்குள் ஒருவன்’ திரைப்படம். இப்படம் ‘லூசியா’ என்ற கன்னடப் படத்தின் ரீமேக் ஆகும். இந்நிலையில் இப்படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக 3 படங்களைத் தயாரிக்கிறார் சி.வி.குமார்.

முதல் படம்:

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் ஸ்டுடியோ கீரின் நிறுவனமும் இணைந்து ‘இன்று நேற்று நாளை’ என்ற புதிய படத்திற்கு பூஜை போட்டு, இன்று முதல் படப்பிடிப்பை இனிதே துவக்கியுள்ளது. இயக்குனர் நலன் குமாரசாமியிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ரவி இப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிறார். விஷ்ணு, கருணாகரன் நடிக்கும் இப்படத்திற்கான ஒளிப்பதிவை வசந்த் (அறிமுகம்) மேற்கொள்கிறார். இசையை “ஹிப் ஹாப் தமிழா” புகழ் ஆதியும், படத்தொகுப்பை லியோ ஜான்பாலும் கவனித்து கொள்கின்றனர்.

இரண்டாவது படம்:

‘சூதுகவ்வும்’ படத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்த நலன் குமாரசாமி ‘கை நீளம்’ என்ற படத்தின் மூலம் தனது இரண்டாவது படத்திற்கு ஆயத்தமாகிவிட்டார். இது ‘சூதுகவ்வும்’ படத்தின் இரண்டாம் அத்தியாயம். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தினேஷ் ஒளிப்பதிவை மேற்கொள்ள, லியோ ஜான்பால் படத்தொகுப்பை கவனித்துக் கொள்கிறார். அபி அன்ட் அபி நிறுவனத்துடன் இணைந்து திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது. இப்படத்தின் படபிடிப்பு ரஜினி பிறந்தநாளான 12.12.2014 அன்று துவங்கவுள்ளது.

மூன்றாம் படம்:

பீட்சா, ஜிகர்தண்டா என தனது இரண்டு படங்களிலும் வித்தியாசமான கதைகளங்களை கையாண்டு வெற்றி பெற்ற இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கும் மூன்றாவது படம் ‘இறைவி’. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, கேவிமிக் ஏரி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இப்படத்தின் படபிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விவேகம் - Never Give Up பாடல் வீடியோ


;