விஷால் வழியில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா!

விஷால் வழியில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா!

செய்திகள் 3-Oct-2014 3:43 PM IST VRC கருத்துக்கள்

நடிகர் விஷால் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம் படங்களைத் தயாரித்து வருகிறார். அதேபோல் ‘பூஜை’ படத்திலிருந்து ‘வி மியூசிக்’ என்ற ஆடியோ நிறுவனத்தையும் தொடங்கி, அதன் ஆடியோ உரிமையையும் வாங்கியிருக்கிறார் விஷால். தற்போது இதே வழியைப் பின்பற்றி இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவும் ‘ஸ்ரீ ஆடியோஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கி வனிதா விஜயகுமார் தயாரிக்கும் ‘எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல்’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை வாங்கியிருக்கிறார். இப்படத்திற்கு இசையும் அவரேதான். இன்று காலை (அக்டோபர் 2) நடந்த ஆடியோ விழாவில், ஸ்ரீகாந்த் தேவாவின் தந்தையும், இசையமைப்பாளருமான தேவா இப்படத்தின் இசைக்குறுந்தகடை வெளியிட்டார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;