‘யான்’, ‘பேங் பேங்’ - ஒரு நாள் கலெக்ஷன் எவ்வளவு?

‘யான்’, ‘பேங் பேங்’ - ஒரு நாள் கலெக்ஷன் எவ்வளவு?

செய்திகள் 3-Oct-2014 3:33 PM IST Chandru கருத்துக்கள்

காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று ரவி கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா நடித்திருக்கும் ‘யான்’ படமும், ரித்திக் ரோஷன், காத்ரினா கைஃப் நடித்திருக்கும் ‘பேங் பேங்’ ஹிந்தி படமும் ஒரே நேரத்தில் வெளியானது. ‘யான்’ படத்தின் இயக்குனர் ரவி கே.சந்திரன் ஹந்தியில் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்திருப்பதால், கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட்டிலும் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு இருந்தது. விமர்சனங்கள் ‘யான்’ படத்திற்கு எதிராக அமைந்தபோதிலும் படத்தின் முதல் நாள் வசூலை அது எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. இப்படம் முதல் நாளில் மட்டும் கிட்டத்தட்ட 2 கோடியே 80 லட்சம் ரூபாய் வசூல் செய்திருக்கிறதாம்.

அதேபோல் பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் ‘பேங் பேங்’ திரைப்படம் ஒரே நாளில் கிட்டத்தட்ட 27 கோடியே 50 லட்சம் ரூபாய் வசூல் செய்திருக்கிறதாம். முதல் நாள் வசூலில் சாதனை படைத்த படங்களான தூம் 3, சென்னை எக்ஸ்பிரஸ், ஏக் தா டைகர், சிங்கம் ரிட்டர்ன்ஸ் ஆகிய ஹிந்தி படங்களின் வரிசையில் ‘பேங் பேங்’ படமும் இடம் பிடித்திருக்கிறது. தவிர ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளிவந்த படங்களில் முதல் நாளில் மிகப்பெரிய கலெக்ஷன் செய்திருப்பதும் இந்த ‘பேங் பேங்’ படம்தான்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;