விளையாட்டாய் களமிறங்கிய ‘கத்தி’

விளையாட்டாய் களமிறங்கிய ‘கத்தி’

செய்திகள் 3-Oct-2014 1:02 PM IST Chandru கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘கத்தி’ படம் வரும் தீபாவளிக்கு உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. ‘கத்தி’ படத்தின் பாடல்களும், ஃபர்ஸ்ட் லுக் டீஸரும் ஏற்கெனவே வெளிவந்திருக்கும் நிலையில், ‘கத்தி’யின் முழுநீள டிரைலருக்காக தவம் கிடக்கிறார்கள் இளையதளபதி ரசிகர்கள். டிரைலருக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஒரு சிறிய ஆறுதலாக ‘கத்தி’ படத்தின் ஆன்ட்ராய்டு கேம் ஒன்று தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. ‘3டி’யில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கேமில் விஜய்யின் சண்டைக்காட்சிகள் ரசிகர்களைக் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு ஃபோன் வைத்திருப்பவர்கள் உடனடியாக ‘கூகுள் பிளே ஸ்டோரு’க்கு சென்று இந்த விளையாட்டாய் டவுன்லோடு செய்து தளபதியை நீங்களே ஆட்டுவிக்கலாம்.

கடைசியாக, ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான சூர்யாவின் ‘அஞ்சான்’ படத்திற்கான கார் ரேஸ் கேம் ஒன்று வெளிவந்தது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;