விஷ்ணு, கருணாகரன் இணையும் ‘இன்று நேற்று நாளை’

விஷ்ணு, கருணாகரன் இணையும் ‘இன்று நேற்று நாளை’

செய்திகள் 3-Oct-2014 12:09 PM IST Chandru கருத்துக்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு நடித்திருக்கும் ‘ஜீவா’ படம் தற்போது நல்ல விமர்சனங்களுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், விஷ்ணு அடுத்ததாக ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில் நடிக்கவிருக்கிறார். ‘முண்டாசுப்பட்டி’ படத்தைத் தொடர்ந்து சி.வி.குமாரின் தயாரிப்பில் இரண்டாவது முறையாக விஷ்ணு நடிக்கும் இப்படத்திற்கு ‘இன்று நேற்று நாளை’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. விஷ்ணுவுடன் இணைந்து கருணாகரனும் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தை ரவி என்பவர் இயக்குகிறார். ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவை வசந்த் கவனிக்க, எடிட்டிங் பணிகளை லியோ ஜான் பால் மேற்கொள்கிறார். இன்று முதல் இப்படத்திற்கான ஷூட்டிங் ஆரம்பமாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விவேகம் - Never Give Up பாடல் வீடியோ


;