‘மஜ்னு’ பட இயக்குனரின் அடுத்த படம்?

‘மஜ்னு’ பட இயக்குனரின் அடுத்த படம்?

செய்திகள் 3-Oct-2014 10:05 AM IST VRC கருத்துக்கள்

‘கண்ணெதிரே தோன்றினாள்’, ‘மஜ்னு’ உட்பட பல படங்களை இயக்கிய ரவிச்சந்திரன் அடுத்து இயக்கும் படத்திற்கு ‘நட்பதிகாரம்-79’ என்று பெயரிட்டுள்ளனர். ‘ஜெயம் சினி என்டர்பிரைசஸ்’ நிறுவனம் சார்பில் டி.ரவிகுமார் தயாரிக்கும் இப்படத்தில் ‘ஓ நாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தில் நடித்த ராஜ்பரத் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ‘வல்லினம்’ படத்தில் நடித்த அம்ஜத்கான் நடிக்கிறர். ‘இனிது இனிது’ படத்தில் நடித்த ரேஷ்மி, புதுமுகம் தேஜஸ்வி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். காதலையும் நட்பையும் உள்ளடக்கி இரு குடும்பங்களுக்கிடையே உள்ள் உறவை சித்தரிக்கும் படமாம் இது. இந்தப் படத்திற்கு ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, அறிமுகம் தீபக் நிலம்பூர் இசை அமைக்கிறார். இப்படத்திற்காக் இசை அமைப்பாளர் தேவா ஒரு கானா பாடலை பாடியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பெங்க்ளூர், மைசூர் ஆகிய இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செஞ்சிட்டாலே என் காதல - படத்தின் சிறு முன்னோட்ட காட்சிகள்


;