சர்வதேச திரைப்பட விழாவில் ‘குற்றம் கடிதல்’

சர்வதேச திரைப்பட விழாவில் ‘குற்றம் கடிதல்’

செய்திகள் 3-Oct-2014 9:47 AM IST VRC கருத்துக்கள்

தேசிய விருது பெற்ற ‘தங்கமீன்கள்’ படம் உட்பட ஏராளமான திரைப்படங்களை வாங்கி வெளியிட்டுள்ள ‘ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்பரேஷன்’ அதிபர் ஜே.சதீஷ்குமார் அடுத்து தயாரித்து வெளியிட இருக்கும் படம் ‘குற்றம் கடிதல்’. பிரம்மா.ஜி. இயக்கியுள்ள் இப்படத்தில் முற்றிலும் புதுமுகங்களே நடித்திருக்கிறார்கள். ரிலீசாவதற்கு முன்பாகவே இப்படம் ஜிம்பாவே நாட்டில் நாளை (4-10-14) முதல் 11-ஆம் தேதி வரை நடக்க உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளது. அத்துடன் மும்பையில் வருகிற 14-ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ள 16-ஆவது திரைப்பட விழாவில் ‘இந்திய திரை அரங்கில் புதிய முகங்கள்’ என்ற தகுதியின் கீழும் திரையிட தேர்வாகியுள்ளது.

இந்தப் படம் குறித்து இயக்குனர் பிரம்மா கூறும்போது ' கடிதல் என்றால் கண்டித்தல் அல்லது கடிந்து கொள்ளுதல் என பொருள். ஐந்து பல்வேறு வழக்கை தரத்தை சேர்ந்த மக்களின் ஒரு நாள் வாழ்கை, அந்த ஒரு நாளில் ஏற்படும் சம்பவங்கள், அதன் அடிப்படையில் அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் குழப்பங்களை சித்தரிக்கும் கதைதான் 'குற்றம் கடிதல்' என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - டிரைலர்


;