உறுதியாகி விட்டது மணிரத்னம், துல்கர் சல்மான் கூட்டணி!

உறுதியாகி விட்டது மணிரத்னம், துல்கர் சல்மான் கூட்டணி!

செய்திகள் 3-Oct-2014 9:43 AM IST VRC கருத்துக்கள்

மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக அவர் நடிக்கிறார், இவர் நடிக்கிறார் என்று பல ஹீரோக்களின் பெயர்கள் அடிப்பட்டு வந்த நிலையில், இப்போது துல்கர் சல்மான் நடிக்கிறார் என்பது முடிவாகி விட்டது. ‘வாயை மூடி பேசவும்’ படத்திற்கு பிறகு துல்கர் சல்மான் தமிழில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 6-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. இப்படத்திற்கு மணிரத்னத்தின் ஆரம்பகால ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். மணிரத்ன்ம் இயக்கிய ‘அலைபாயுதே’ படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் மூலம் மணிரத்னமும், பி.சி.ஸ்ரீராமும் மீண்டும் இணைகின்றனர். இப்படத்தின் கதாநாயகிக்காக புதுமுக நடிகை ஒருவரை தேடி வருகிறாராம் மணிரத்னம். படத்திற்கு மணிரத்னத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானே இசை அமைக்கிறார். இப்படத்தை ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவம் சார்பில் மணிரத்னமே தயாரிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குரு உச்சத்துல இருக்காரு - டிரைலர்


;