‘கத சொல்லப் போறோம்’ படத்திற்காக பூங்காவில் உருவான பாடல்கள்!

‘கத சொல்லப் போறோம்’ படத்திற்காக பூங்காவில் உருவான பாடல்கள்!

செய்திகள் 1-Oct-2014 12:31 PM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான படங்கள் வருவது அரிது! அந்த வரிசையில் கிட்டத்தட்ட 20 குழந்தைகளை நடிக்க வைத்து, குழந்தைகளுக்காக மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினருக்குமாக உருவாகியுள்ள படம் ‘கத சொல்லப் போறோம். விஜய் டிவியின் ‘நாளைய இயக்குனர்’ டீமிலிருந்து கல்யாண் என்பவர் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னையிலுள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் கிரிதர் லால் நாக்பால், ஜெயவேல், ‘முன்டாசுப்பட்டி’ இயக்குனர் ராம்குமார் , ‘தெகிடி’ இயக்குனர் ரமேஷ் , ‘கண்டுபிடி கண்டுபிடி’ இயக்குனர் ராம்குமார், நடிகர்கள் காளி, டேனி, நடிகை தன்ஷிகா , ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவிற்கு வந்தவர்களை தயாரிப்பாளர் ஜே.ஜெயகிருஷ்ணன் மற்றும் இயக்குனர் எஸ்.கல்யான் ஆகியோர் மலர்கொத்து வழங்கி , பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். இந்தப் படத்திற்கு அறிமுக பாடலாசிரியர் வினோதன் பாடல்கள் எழுத, அறிமுக இசை அமைப்பாளர் ஆர்.பவன் இசை அமைத்துள்ளார்.

படத்தில் நடித்த அத்தனை குழந்தைகளும் இணைந்து இசைத் தட்டை வெளியிட, படத்தில் நடிக்காமல் விழாவிற்கு வந்திருந்த மற்ற குழந்தைகள் பெற்றுக்கொள்ள விழா வித்தியாசமாக நடைபெற்றது.

விழாவில் இயக்குனர் கல்யாண் பேசும்போது, ‘‘இப்படத்திற்காக கிட்டத்தட்ட 400 குழந்தைகளை ஆடிஷ்ன் செய்தோம். கடைசியில் அவர்களில் நடிக்க தெரியாத சில குழந்தைகளை மட்டும் தேர்வு செய்து, கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுக் காலம் அவர்களுடன் பேசிப் பழகி இப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறேன். காரணம் இக்கதைக்கு நடிக்க தெரியாத குழந்தைகள் தான் தேவைப்பட்டது. இப்படத்தை பெரிய பட்ஜெட்டில் எல்லாம் எடுக்கவில்லை. அவ்வளவு பண வசதி இல்லாததால் படத்தின் ஆரம்ப நிலையில் பாடல் கம்போசிங், டிஸ்கஷன் போன்ற வேலைகளை கூட ஒரு பூங்காவில் தான் நடத்தினோம். இதையெல்லாம் மீறி இப்போது படம் நன்றாக வந்திருக்கிறது. இப்படம் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்’’ என்றார்.

இயக்குனர் கல்யாண் இந்தப் படத்துடன் ‘காத்தாடி’ என்ற ஒரு படத்தையும் இயக்கி வருகிறார். இப்படத்தில் கார்த்திக், தன்ஷிகா முதலானோர் நடித்து வருகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உரு - டிரைலர்


;