70ஐ தொட்ட ‘ஐ’... 20ஐ நெருங்குமா ‘கத்தி’?

70ஐ தொட்ட ‘ஐ’... 20ஐ நெருங்குமா ‘கத்தி’?

செய்திகள் 1-Oct-2014 11:34 AM IST Chandru கருத்துக்கள்

விக்ரம், ஷங்கரின் ‘ஐ’ டீஸர் சாதனை இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியான ‘ஐ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் முதல் 12 மணி நேரத்திலேயே 10 லட்சம் பார்வையாளர்களையும், 3 நாட்களில் 25 லட்சம் பார்வையாளர்களையும் ஒரு வாரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களையும் கடந்து சாதனை படைத்தது. தற்போது மேலும் ஒரு சாதனையாக 15 நாட்களில் 70 லட்சம் ‘யு டியூப்’ பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது. தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை இது ஒரு மிகப்பெரிய சாதனை. இப்படம் 1 கோடி பார்வையாளர்களைத் தொட்ட முதல் தென்னிந்திய சினிமா என்ற சாதனையைப் படைக்குமா என்பதுதான் சீயான் ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வி.

இது ஒருபுறமிருக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் ‘கத்தி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி வெளியானது. கேமராவை 360 டிகிரி சுழற்றி ஒளிப்பதிவு செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த டீஸருக்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆனால், மற்ற ரசிகர்களை இந்த டீஸர் பெரிய அளவில் கவரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த டீஸர் வெளியாகி கிட்டத்தட்ட 12 நாட்கள் ஆன நிலையில்கூட இன்னும் 20 லட்சம் பார்வையாளர்களைக்கூட எட்டவில்லை. தற்போதைய நிலவரப்படி 19 லட்சத்தைத்தான் நெருங்கிக் கொண்டிருக்கிறது. விஜய்யின் முந்தைய படங்களான ‘ஜில்லா’, ‘தலைவா’ ஆகிய படங்களின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் இதைவிட பெரிய அளவில் ரசிகர்களைச் சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - Trailer


;