விஷாலின் லயோலா காலேஜ் சென்டிமென்ட்!

விஷாலின் லயோலா காலேஜ் சென்டிமென்ட்!

செய்திகள் 1-Oct-2014 10:28 AM IST Chandru கருத்துக்கள்

லயோலா காலேஜில் விஸ்காம் படித்தவர் நடிகர் விஷால் என்பது அவருடைய ரசிகர்கள் பலருக்கும் தெரிந்த விஷயம். தான் படித்த கல்லூரிக்கு மரியாதை செய்வதில் விஷால் எப்பவும் முன்னணியில் நிற்பார். சினிமாவில் தான் பெற்ற வளர்ச்சியில் இக்கல்லூரிக்கும் முக்கியப் பங்குண்டு என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வார்.

தற்போதும் அந்த ‘சென்டிமென்ட்’ காரணமாகவே, ஹரி இயக்கத்தில் தான் நடித்திருக்கும் ‘பூஜை’ படத்தின் இசை வெளியீட்டை லயோலா கல்லூரியின் பெட்ராம் ஹாலில் இன்று மதியம் 1 மணிக்கு (அக்டோபர் 1) நடத்தவிருக்கிறார் விஷால். தனது ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் மூலம் கடந்த வருடம் வெளிவந்த ‘பாண்டியநாடு’ படத்தின் ஆடியோ விழாவையும் இங்கேதான் நடத்தினார் விஷால். நாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, தீராத விளையாட்டு பிள்ளை, அவன் இவன், சமர் படங்களைத் தொடர்ந்து விஷாலும், யுவனும் 7 முறையாக ‘பூஜை’யில் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். வரும் தீபாவளிக்கு படம் வெளியாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;