ரிலீஸ் தேதி மாறும் விமல் படம்!

ரிலீஸ் தேதி மாறும் விமல் படம்!

செய்திகள் 30-Sep-2014 1:09 PM IST VRC கருத்துக்கள்

ஆர்.கண்ணன் இயக்கத்தில், விமல், சூரி நடித்துள்ள படம் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’. இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்ட நிலையில் இப்படம் அக்டோபர் 2 தேதி, காந்தி ஜெயந்தியன்று ரிலீஸ் என்று அறிவித்திருந்தார் படத்தின் இயக்குனர் கண்ணன். ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி இப்படம் 2 -ஆம் தேதி ரிலீசாகாதாம்! ஒரு வாரம் தள்ளி அதாவது அக்டோபர் 10-ஆம் தேதி அல்லது அக்டோபர் 22-ஆம் தேதி தீபாவளியன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கார்த்தி நடித்த ‘மெட்ராஸ்’, சுசீந்திரனின் ‘ஜீவா’ ஆகிய படங்கள் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்களிடைய பலத்த வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருப்பதாலும். அக்டோபர் 2-ஆம் தேதி ரவி கே.சந்திரன் இயக்கியுள்ள ‘யான்’ படம் வெளியாகவிருப்பதாலும் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தின் ரிலீஸை தள்ளி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - ட்ரைலர்


;