விஐபி 75வது நாள்: ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் தனுஷ்!

விஐபி 75வது நாள்: ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் தனுஷ்!

செய்திகள் 30-Sep-2014 11:08 AM IST Chandru கருத்துக்கள்

இந்த வருடத்தின் ‘பிளாக்பஸ்டர்’ ஹிட் படம் என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘வேலையில்லா பட்டதாரி’ 75வது நாளை எட்டியுள்ளது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், தான் இயக்குனராக அறிமுகமான முதல் படத்திலேயே சூப்பர்ஹிட் வெற்றியைச் சுவைத்துள்ளார். தனுஷின் கேரியரிலேயே மிக முக்கிய படமாக அமைந்திருக்கும் ‘விஐபி’ படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்யவிருக்கிறார்கள். முதலில் ரகுவரன் கேரக்டரில் ஹிந்தி நடிகர் ஒருவரை நடிக்க வைக்கலாம் என எண்ணியிருந்தார்களாம். தற்போது, ‘ரான்ஜ்னா’ படத்தின் மூலம் ஹிந்தி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள தனுஷையே ஹிந்தியிலும் நாயகனாக்கினால் என்ன என்று யோசித்து வருகிறார்களாம். தவிர, தற்போது ‘ஷமிதாப்’ படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து தனுஷ் நடித்து வருவதால் அவரின் புகழ் ஹிந்தியில் இன்னும் அதிகமாகியிருக்கிறது. இதனால் ‘விஐபி’ ரீமேக்கில் அவரையே நடிக்க வைக்கலாம் என திட்டமிட்டிருக்கிறார்களாம். இந்த ரீமேக்கிற்கான வேலைகள் அடுத்த வருடம் ஆரம்பமாகுமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இட்லி - டீசர்


;