சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்?

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்?

செய்திகள் 30-Sep-2014 10:25 AM IST Chandru கருத்துக்கள்

2013ஆம் ஆண்டின் சூப்பர்ஹிட் திரைப்படமான ‘வருத்தப்படாத வாலிபர்’ சங்கம் படத்தின் கூட்டணி மீண்டும் ‘ரஜினி முருகன்’ படத்தின் மூலம் இணைந்திருக்கிறது. பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க லக்ஷ்மி மேனன், தமன்னா ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது மலையாள நடிகை கீர்த்தி சுரேஷை நாயகி ஆக்கலாம் என்ற முடிவில் இருக்கிறதாம் ‘ரஜினி முருகன்’ டீம்! இதுகுறித்த அதிகாரபூர்வ அறவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்கிறார்கள். 2000ஆம் ஆண்டு ‘பைலட்’ என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், 2013ஆம் ஆண்டு வெளிவந்த ‘கீதாஞ்சலி’ மலையாள படத்தில் நாயகியாக அறிமுகமானார். தற்போது தமிழில் ‘மானே தேனே பேயே’ என்ற படத்தில் ஆரிக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

மதுரையைக் களமாகக் கொண்டு உருவாகும் ‘ரஜினி முருகன்’ படத்தின் படப்படிப்பு நவம்பர் மாத இறுதியில் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் துவங்கும் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - கருத்தவன்லாம் கலீஜாம் ஆடியோ பாடல்


;