மலேசிய புலனாய்வு அதிகாரியாக சரத்குமார்!

மலேசிய புலனாய்வு அதிகாரியாக சரத்குமார்!

செய்திகள் 30-Sep-2014 9:58 AM IST VRC கருத்துக்கள்

இன்றைய காலகட்டத்தில் சோஷியல் மீடியாவின் அதிகபடியான வளர்ச்சியால் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ‘நீ நான் நிழல்’. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களால் ஏராளமான இளம் தலைமுறையினர், அதிலும் குறிப்பாக இளம் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். அனைவருக்குமாக நல்ல ஒரு மெஸேஜை சொல்லும் படமாக ‘நீ நான் நிழல்’ படம் உருவாகியிருப்பதாக கூறுகிறார் இப்படத்தை இயக்கியிருக்கும் ஜான் ராபின்சன். இயக்குனர் அதியமானுடன் பல தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜான் ராபின்சன், 15 வருட கால போராட்டத்திற்கு பிறகு முதன் முதலாக இயக்கும் படமாம் இது!

‘நிமிதா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் பிந்து ஜான் வர்க்கீஸ் தயாரித்துள்ள இப்படத்தின் 85 சதவிகித படப்பிடிப்பு மலேசியாவிலும், மீதி 15 சதவிகித பாப்பிடிப்பு தமிழகத்திலும் நடந்துள்ளது. இப்படத்தில் மலேசியா புலனாய்வு துறை அதிகாரி அன்வர் அலி எனும் கேரக்டரில் சரத்குமார் நடித்துள்ளார். படத்தின் கதாநாயகன் - நாயகியாக அர்ஜுன் லால், இஷிதா நடித்திருக்கிறார்கள். வில்லனாக மலேசிய வாழ் தமிழர் ஹரிதாஸ் நடித்துள்ளார். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகியுள்ள இப்படத்திற்கு சித்தார்த் இசை அமைத்துள்ளார். இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் விரைவில் ரிலீசாகவிருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. படத்தின் இசையை திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா வெளியிட, நடிகர் விதார்த் பெற்று கொண்டார். இப்படத்தை தனது ‘ஸ்ரீமுத்தாரமன் பிக்சர்ஸ் நிறுவனம்’ சார்பில் வெளியிடுகிறார் டாக்டர் பி.ஜி.எம்.சிவகுமார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எச்சரிக்கை - டிரைலர்


;