நாளை சினிமா காட்சிகள் ரத்து!

நாளை சினிமா காட்சிகள் ரத்து!

செய்திகள் 29-Sep-2014 4:03 PM IST Chandru கருத்துக்கள்

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக தியேட்டர்களில் நாளை 4 காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் இன்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் செயற்குழு சங்க கூட்டம் நடைபெற்றது. அதில் அதன் தலைவர் அண்ணாமலை, பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் உட்பட சங்க நிர்வாகிகள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்த பின்னர், திரையுலகிற்கு பல முன்னேற்றத் திட்டங்களை செயல்படுத்தியுள்ள ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை சினிமா காட்சிகள் அனைத்தையும் ரத்து செய்வதோடு, உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கருப்பன் - டிரைலர்


;