கார்த்திக்கு இயக்குனர் பா.ரஞ்சித் வேண்டுகோள்!

கார்த்திக்கு இயக்குனர் பா.ரஞ்சித் வேண்டுகோள்!

செய்திகள் 29-Sep-2014 3:47 PM IST VRC கருத்துக்கள்

‘‘என்னுடைய முதல் படமான ‘அட்டகத்தி’யை எடுத்து முடித்தப்போது, அந்த படத்திற்கு எனக்கு இண்ட்ஸ்ட்ரியில் இருந்து அவ்வளவு ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால அந்த நேரத்தில் ‘அட்டகத்தி’ படத்தை பார்த்து, அதன் மீது நம்பிக்கை வைத்து அப்படத்தை வாங்கி வெளியிட்டவர் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவன அதிபர் கே.ஈ.ஞானவேல்ராஜா சார் தான். அவருக்கு என்னோட நன்றிகள்! அந்தப் படத்தை தொடர்ந்து என்னுடைய இரண்டாவது படமாக அமைந்துள்ள ‘மெட்ராஸ்’ படத்திலும் அவருடன் இணைந்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்’’ என்றார் இன்று சென்னையில் நடந்த ‘மெட்ராஸ்’ படத்தின் ‘சக்சஸ் மீட்’டில் இயக்குனர் பா.ரஞ்சித். மேலும் அவர் ‘மெட்ராஸ்’ படத்தின் ஹீரோ கார்த்தி பற்றி பேசும்போது, ‘‘நீங்கள் தொடர்ந்து இதுபோன்ற வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும்’’ என்று அவரிடம் ஒரு வேண்டுகோளையும் வைத்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - டிரைலர்


;