சினிமாவில் நுழையும் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன்!

சினிமாவில் நுழையும் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன்!

செய்திகள் 29-Sep-2014 2:04 PM IST Chandru கருத்துக்கள்

அக்டோபர் 2ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கும் இசைக் கச்சேரி குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான். அப்போது, தன் மகன் அமீனுக்கு படங்களில் நடிப்பதற்கு நிறைய சினிமா வாய்ப்புகள் தேடி வந்ததாகவும், ஆனால் அவனின் படிப்பை கருத்தில்கொண்டு அதை தவிர்த்துவிட்டதாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் குறிப்பிட்டார். அதேபோல், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படமொன்றிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருக்கிறார். அனேகமாக இந்தப் படத்தின் ஒரு பாடலில் தன் மகனை பாட வைக்கும் எண்ணம் இருப்பதாகவும் அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசினாராம். ரஹ்மான் இசையமைப்பில் உருவான ‘கப்புள்ஸ் ரீட்டீட்’ என்ற ஹாலிவுட் படத்தில் ஒரு பாடலை ஏற்கெனவே அமீன் பாடியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டாளி - டிரைலர்


;