விஷ்ணு வீட்டுக்கு வந்த புது விருந்தாளி!

விஷ்ணு வீட்டுக்கு வந்த புது விருந்தாளி!

செய்திகள் 29-Sep-2014 1:03 PM IST Chandru கருத்துக்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு, ஸ்ரீதிவ்யா நடித்த ‘ஜீவா’ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘முண்டாசுப்பட்டி’ படத்தைத் தொடர்ந்து இப்படத்திற்கும் விமர்சனரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதால் சந்தோஷத்தில் மிதக்கிறார் விஷ்ணு. ‘சிசிஎல்’ கிரிக்கெட் போட்டிகளில் நிஜ ஹீரோவாக ஜொலித்த விஷ்ணு, இப்படத்திலும் கிரிக்கெட் வீரராகவே நடித்திருக்கிறார். விஷ்ணுவின் நெருங்கிய நண்பர்களான விஷாலும், ஆர்யாவும் இணைந்து இப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

‘ஜீவா’வுக்கு கிடைத்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக தன் மனைவி ரஜினிக்கு, shih-tzu வகையைச் சேர்ந்த அழகான நாய்க்குட்டி ஒன்றை பரிசளித்திருக்கிறார் விஷ்ணு. பார்ப்பதற்கு செம க்யூட்டாக இருக்கும் இந்த நாயக்குட்டிக்கு ‘பாம்பி’ (BAMBI) என்று பெயர் வைத்திருக்கிறார்கள் விஷ்ணு - ரஜினி தம்பதி! இந்த புது விருந்தாளியுடன்தான் இப்போது பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறாராம் ரஜினி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;