‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’வுக்கு க்ளீன் ‘யு’

‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’வுக்கு க்ளீன் ‘யு’

செய்திகள் 29-Sep-2014 12:37 PM IST Chandru கருத்துக்கள்

‘சேட்டை’ படத்தைத் தொடர்ந்து கண்ணன் இயக்கும் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்திற்கு சென்சாரில் கட் இல்லாத ‘யு’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. ரெண்டு ராஜாவாக விமலும், சூரியும் நடித்திருக்கும் இப்படத்தில் ப்ரியா ஆனந்தும், விசாகா சிங்கும் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். டி.இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் நடிகை லக்ஷ்மி மேனன் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். குடும்பத்துடன் பார்க்கும் காமெடிப் படமாக உருவாகியிருக்கும் இந்த ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ரிலீஸாகிறது. இதனுடன் ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘யான்’ படமும் போட்டியிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - ஆடியோ பாடல்கள்


;