மம்முட்டிக்கு ஜோடியாகும் ஆன்ட்ரியா!

மம்முட்டிக்கு ஜோடியாகும் ஆன்ட்ரியா!

செய்திகள் 29-Sep-2014 10:34 AM IST VRC கருத்துக்கள்

‘அன்னயும் ரசூலும்’ படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் ஆன்ட்ரியா. இந்தப் படத்தை தொடர்ந்து ப்ருத்திவிராஜுடன் ‘லண்டன் பிரிட்ஜ்’ என்ற படத்தில் நடித்த ஆன்ட்ரியா அடுத்து மம்முட்டி நடிக்கும் ‘ஃபயர் மேன்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். திபு கருணாகரன் இயக்கும் இப்படத்தில் தீயணைப்பு துறை அதிகாரியாக நடிக்கிறார் மம்முட்டி. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. ஆன்ட்ரியா தற்போது கமலின் ‘விஸ்வரூபம் 2’, ‘உத்தம வில்லன்’, ராம் இயக்கத்தில் ‘தரமணி’ என பல தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;