விஜய் 58 : 100 கோடி பட்ஜெட், 200 நாள் கால்ஷீட்?

விஜய் 58 : 100 கோடி பட்ஜெட், 200 நாள் கால்ஷீட்?

செய்திகள் 29-Sep-2014 10:13 AM IST Chandru கருத்துக்கள்

‘கத்தி’ படத்தைத் தொடர்ந்து சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஃபேன்டஸி படத்திற்கு 100 கோடி ரூபாய் பட்ஜெட் என்று கூறி வாய்பிளக்க வைக்கிறார்கள். இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளிவரவில்லை. ஆனால், இப்படத்திற்காக கிட்டத்தட்ட 200 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம் விஜய். அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், ஹன்சிகா மோத்வானியும் நடிக்கும் இப்படத்தில் கன்னட நடிகர் ‘நான் ஈ’ புகழ் சுதீப்பும், நடிகை ஸ்ரீதேவியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ‘நட்டி’ நட்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.

‘கத்தி’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து, தன் பங்கு ‘டப்பிங்’ வேலைகளையும் முடித்துவிட்டு தற்போது ஓய்வில் இருக்கிறார் விஜய். வரும் அக்டோபர் 22ம் தேதி தீபாவளியை முன்னிட்டு ‘கத்தி’ படம் உலகமெங்கும் ரிலீஸாகிறது. இதைத் தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் சிம்புதேவன் இயக்கத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் விஜய். முதல் கட்டமாக கேரளாவிலும், இரண்டாம் கட்டமாக மைசூர், பெங்களூர் உள்ளிட்ட இடங்களிலும், 3ஆம் கட்டமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளிலும், 4ஆம் கட்டமாக குலுமணாலி, டார்ஜிலிங் உள்ளிட்ட மலைப்பிரதேசங்களிலும் படப்பிடிப்பை நடத்தவிருக்கிறார்களாம். அதன்பிறகு பாடல்கள் மற்றும் குறிப்பிட்ட ஒரு சில காட்சிகளுக்காக வெளிநாடுகளுக்கும் சென்று படப்பிடிப்பை நடத்தவிருக்கிறார்களாம்.

விஜய்யின் பி.ஆர்.ஓ.வான பி.டி.செல்வகுமாரும், கேரளாவைச் சேர்ந்த ஷிபுவின் தமீன் ரிலீஸும் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;