முழுக்க முழுக்க லண்டனில் படமாகியுள்ள படம்!

முழுக்க முழுக்க லண்டனில் படமாகியுள்ள படம்!

செய்திகள் 27-Sep-2014 3:32 PM IST VRC கருத்துக்கள்

பணத்திற்காகவும், பழிவாங்குதலுக்காகவும் பெண்களைக் கடத்துவது அண்மைக் காலமாக ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகிறது. இவ்வாறான ஒரு உண்மை சம்பவத்தை வைத்து முழுக்க முழுக்க லண்டனில் எடுக்கப்பட்டிருக்கும் படம் ‘யாவும் வசப்படும்’. யுத்த சூழலில் 25 வருடங்களாக நின்று போன ஈழத்தமிழ் சினிமாவுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் வகையில் உருவான படமாம் ‘மண்’. இப்படத்தை இயக்கிய புதியவன் ராசய்யா, ‘யாவும் வசப்படும்’ படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். இப்படத்தில் கனடாவை சேர்ந்த விஜித், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தில்மிகா கதாநாயகன், நாயகியாக அறிமுகமாகவுள்ளனர். இவர்களுடன் இரண்டாவது கதாநாயகன் நாயகியாக லண்டனை சேர்ந்த பாலா, வைபவி நடிக்க இவர்களுடன் படத்தின் தயாரிப்பாளரான ஸ்ரீபத்பாபி வில்லனாக நடித்துள்ளார்.

யூகிக்க முடியாத திடீர் திருப்பங்களுடன் பல ஆச்சர்யங்கள் நிறைந்த இப்படம் ஒரு ஆங்கில படத்தை பார்க்கும் உணர்வை தரும் வகையில் உருவாக்கியிருப்பதாக கூறுகிறார் இப்படத்தின் இயக்குனர் புதியவன் ராசய்யா. லண்டன் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் படமாகியுள்ள அமைத்துள்ளார். இப்படத்தை ‘ஏ.ஏ.ஏ.புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் இப்படத்திற்கு என்.டி.நந்தா ஒளிப்பதிவு செய்ய, ஆர்.கே.சுந்தர் இசை ஸ்ரீபத்பாபி தயாரித்துள்ளார். இப்படம் அக்டோபர் 10-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உரு - டீசர்


;