1 படம் 4 கதை!

1 படம் 4 கதை!

செய்திகள் 27-Sep-2014 10:03 AM IST VRC கருத்துக்கள்

‘ஆரோகணம்’ படத்தை இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் இரண்டாவதாக இயக்கியுள்ள படம் ‘நெருங்கி வா முத்தமிடாதே’. விரைவில் ரிலீசாகவிருக்கும் இப்படம் குறித்து இயக்குனரும், நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் கூறும்போது, ‘‘இது ஒரு டிராவல் ஸ்டோரி! இப்படத்தில் லாரி ஒன்று முக்கிய பாத்திரமாக வருகிறது. கிட்டத்தட்ட 45 லொகேஷன்களில் இப்படத்தை படமாக்கியுள்ளோம். ஒரே படம் என்றாலும் இதில் 4 கதைகள் பயணிப்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் ரசிக்ரகளுக்கு மாறுபட்ட ஒரு அனுபவத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன்’’ என்றார்.

இப்படத்தில் புதுமுகம் ஷபீர் கதையின் நாயகனாக நடித்திருக்க, பியா, ‘லூசியா’ படப்புகழ் ஸ்ருதி ஹரிஹரன் கதையின் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் லட்சுமி ராமகிருஷ்ணன், தம்பி ராமையா, விஜி சந்திரசேகர் முதலானோரும் நடித்துள்ளனர். இப்படத்தை ‘ஏவிஏ புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ஏ.வி.அனூப் தயாரித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரவுக்கு ஆயிரம் கண்கள் - டிரைலர்


;