ராஜமௌலி படத்துக்காக உருவான 100 அடி உயர சிலை!

ராஜமௌலி படத்துக்காக உருவான 100 அடி உயர சிலை!

செய்திகள் 26-Sep-2014 9:48 AM IST Chandru கருத்துக்கள்

இந்திய அளவில் இப்போது இரண்டு படங்களுக்கான எதிர்பார்ப்புதான் அதிகமாக இருக்கிறது. ஒன்று ஷங்கர், விக்ரம் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘ஐ’ படம்’. மற்றொன்று ‘நான் ஈ’ புகழ் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உட்பட பல தென்னிந்திய நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் ‘பாஹுபலி’ படம். ‘ஐ’ படத்தின் பிரம்மாண்டத்தை சமீபத்தில் நடத்திய ஆடியோ விழா மூலமும், ஃபர்ஸ்ட் டீஸர் மூலமும் காட்டிவிட்டார் இயக்குனர் ஷங்கர்.

தற்போது பாஹுபலி படத்தைப் பற்றி வெளிவரும் செய்திகள் ஒவ்வொன்றும் வாய் பிளக்க வைக்கின்றன. இப்படத்திற்காக கலை இயக்குனர் சாபு சிரில் 100 அடி உயர சிலை ஒன்றை உருவாக்கியிருக்கிறாராம். அவர் உருவாக்கிய இந்த சிலையை கிட்டத்தட்ட 40 மணி நேரம் தன் ஆட்களுடன் தொடர்ந்து வேலை செய்து படப்பிடிப்பு இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளாராம் ஸ்டன்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன். இதைவிட மிகப்பெரிய சவால் இந்த சிலையை நேராக நிமிர்த்தி, அதை குறிப்பிட்ட இடத்தில் நிக்க வைக்கப் போவதில்தான் இருக்கிறது என இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி பிரமிப்பாக குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் இந்த சிலை கர்நாடகா மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற கோமதீஷ்வரா (பாஹுபலி) சிலையைப்போல் இருக்காது எனவும் ராஜமௌலி குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;