2.5 கோடி ரூபாய் செலவில் ‘செல்ஃபி புள்ள...’ பாடல்!

2.5 கோடி ரூபாய் செலவில் ‘செல்ஃபி புள்ள...’ பாடல்!

செய்திகள் 25-Sep-2014 1:56 PM IST Chandru கருத்துக்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய், சுனிதி சௌகான் பாடிய ‘செல்ஃபி புள்ள...’ பாடலின் ஒலிப்பதிவு அனிருத் இசையமைப்பில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த 18ஆம் தேதி ‘கத்தி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. ஒரு சில பேட்ஜ் ஒர்க் உள்ளிட்ட பணிகளுக்காக ‘கத்தி’யின் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. அதோடு, ‘செல்ஃபி புள்ள...’ பாடலுக்கான காட்சிகளையும் படம் பிடிக்க வேண்டியிருக்கிறது. முதலில் இப்பாடலை லண்டனுக்குச் சென்று படம்பிடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால், ‘செல்ஃபி புள்ள...’ பாடலுக்காக மும்பையில் 2.5 கோடி ரூபாய் செலவில் மிகப்பிரம்மாண்டமான செட் ஒன்றை அமைத்து படமாக்கவிருக்கிறார்கள்.

மும்பையில் நடைபெறும் இந்த ஷூட்டிங்கில் விஜய், சமந்தா உட்பட நடனக் கலைஞர்கள் பலரும் பங்குபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, இப்பாடலின் ஏதாவது ஒரு காட்சியில் ஏ.ஆர்.முருகதாஸும், அனிருத்தும் ‘தலை’ காட்டிச் செல்லவும் வாய்ப்பிருக்கிறதாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;