சினிமாவில் எம்.எஸ்.தோனி!

சினிமாவில் எம்.எஸ்.தோனி!

செய்திகள் 25-Sep-2014 1:04 PM IST VRC கருத்துக்கள்

பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. ‘எம்.எஸ்.தோனி - தி அன் டோல்ட் ஸ்டோரி’ என்ற பெயரில் ஹிந்தியில் உருவாகும் இப்படத்தை ‘எ வெட்நெஸ் டே’ படப் புகழ் நீரஜ் பாண்டே இயக்குகிறார். இப்படத்தில் தோனி கேரக்டரில் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ரஜ்புத் நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. சுசீந்திரன் இயக்கி, நாளை (26-9-14) ரிலீசாகவிருக்கும் ‘ஜீவா’ மற்றும் அதர்வா நடிப்பில் உருவாகி வரும் ‘ஈட்டி’ முதற்கொண்ட பல படங்கள் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் நிலையில் இப்போது தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாவது விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சில் துணிவிருந்தால் மோஷன் போஸ்டர்


;