ஆங்கில படங்களை மிஞ்சும் ஹிந்திப் படங்கள்!

ஆங்கில படங்களை மிஞ்சும் ஹிந்திப் படங்கள்!

செய்திகள் 25-Sep-2014 11:47 AM IST VRC கருத்துக்கள்

உலக சினிமாவையே எடுத்துக் கொண்டால் அதில் ஹாலிவுட் படங்களில் தான் அதிகபடியான கிளாமர் காட்சிகளும், அரை நிர்வாண காட்சிகளும், உடல் உறவு காட்சிகளும் இடம் பெற்று வந்திருந்தது. ஆனால் இப்போது அந்த பெருமையை (?) பாலிவுட் படங்கள் பெற்றிருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது. யுனைடெட் நேஷன்ஸ் நடத்திய ஒரு ஆய்வு அறிக்கையில் தான் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவில் சித்தரிக்கப்படும் மொத்த பெண் கதாபாத்திரங்களில் 35 சதவிகிதம் பெண் கதாபாத்திரங்கள் படு கவர்ச்சியாகவும், ஆபாசமாகவும் சித்தரிக்கப்படுகிறது என்றும் அதில் ஹிந்திப் படங்கள் தான் முதல் இடத்தில் இருக்கிறது என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்திய சினிமாவில் பெரும்பாலான பெண் கதாபாத்திரங்களும் கவர்ச்சிக்காக மட்டுமே படைக்கப்படுகிறது என்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. யூகே, பிரேசில், தென் கொரியா ஆகிய நாடுகளில் தான் பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தரமான திரைப்படங்கள் தயாராகிறது என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;