‘பாபநாச’த்துக்கு திரும்புகிறார் கமல்ஹாசன்!

‘பாபநாச’த்துக்கு திரும்புகிறார் கமல்ஹாசன்!

செய்திகள் 25-Sep-2014 10:25 AM IST VRC கருத்துக்கள்

‘பாபநாசம்’ படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வந்த கமல்ஹாசன் சமீபத்தில் ஃபுட் பாய்ஸன் காரணமாக சென்னையிலுள்ள ஒரு மருத்தவமனையில் சிகிச்சை பெற்றார். இதனை தொடர்ந்து டாக்டர்கள் கம்லஹாசனிடம் ஒரு சில நாட்கள் ஓய்வெடுக்க சொல்லியிருந்தனர். இப்போது கமல்ஹாசன் பூரண குணமடைந்து விட்டார். இதனை தொடர்ந்து விரைவில் ‘பாபநாசம்’ படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளவிருக்கிறார் கமல்ஹாசன். நமக்கு கிடைத்த தகவலின் படி இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற 2-ஆம் தேதி, காந்தி ஜெயந்தியன்று திருநெல்வேலியில் துவங்கவிருக்கிறது. முழு மூச்சுடன் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு தனது ‘உத்தம வில்லன்’ படத்தின் ரிலீச் வேலையில் இறங்கவிருக்கிறார் கமல் என்றும், இப்படத்தை அவரது பிறந்த நாளான நவம்பர் 7-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;